தமிழகத்தில் அமைகிறதா அமெரிக்க கடற்படை தளம்?.. திடீர் என்ட்ரி கொடுத்துள்ள USNS சால்வர் கப்பல்..!

x

இந்தியா - அமெரிக்கா கடல் பாதுகாப்பு ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக, அமெரிக்க போர் கப்பல்களை பழுது பார்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 'எல் அன்ட் டி' (L&T) நிறுவனத்துடன் கடந்த மாதம் கையெழுத்தானது.

அதன்படி கிழக்கு பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக செயல்பட்டு வரும் யு.எஸ்.என்.எஸ். சால்வர் கப்பல், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள L&T கப்பல் கட்டும் தளத்திற்கு பழுது பார்க்க வந்துள்ளது.

255 அடி நீளம் கொண்ட இந்த கப்பல், 51 அடி அகலமும், 3 ஆயிரத்து 336 டன் எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்