பல ஊர் மக்களை ஏமாற்றி இந்த காரியத்த பண்ணது சின்ன பசங்களா? - போலீசாரை கிறுகிறுக்க வைத்த 3 சிறுவர்கள்

x

வேதாரண்யத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து திருவிழாக்களில் புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கள்ள நோட்டுக்கள் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், மருதூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் கள்ள நோட்டுக்களை அச்சடித்த‌து கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரித்த போது, 3 பேரும் கத்தரிப்புலத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து, கலர் பிரின்ட் எடுத்து புலக்கத்தில் விட்டது தெரிய வந்த‌து. இவர்கள் 200, 100, 50, 20, 10 ஆகிய கள்ள நோட்டுக்களை அச்சடித்து, திருவிழாக்களை குறி வைத்து புழக்கத்தில் விட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பிரின்ட் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள், ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பார்வையிட்டார். பின்னர், கைது செய்யப்பட்ட மூன்று சிறார்களையும் தஞ்சை இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்