புத்தகத்தில் பார்த்தால் மட்டும் போதுமா?...புதுவித அனுபவத்தை தந்த பள்ளி

x

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தனியார் பள்ளி ஒன்று, புத்தகத்தில் பார்த்து மகிழ்ந்த விலங்குகளை நேரில் மாணவர்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்திருந்தது.

கிளி, முயல், செம்மறி ஆடு, கழுதை என 40க்கும் மேற்பட்ட விலங்கள் இந்த கண்காட்சியில் இடம்பிடித்திருந்தன.

இவற்றை கண்டதும் உற்சாகமடைந்த குழந்தைகள்.... ஒவ்வொரு விலங்குக்கு அருகே சென்று, அவற்றை தொட்டு பார்த்து மகிழ்ந்தனர்.

புத்தகத்தில் பார்த்து மகிழ்ந்த விலங்குகளை நேரில் வரவழைத்து மாணவர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தந்த பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்