கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட இருளர் சமூக மக்கள் - அதிகாரிகள் எடுத்த அதிரடி
செங்கல்பட்டு அருகே இருளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் மரம் வெட்டும் கூலித்தொழிலில் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியில் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மரம் வெட்டும் கூலித்தொழிலுக்கு கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த இருளரின மக்கள் 27 பேரை மீட்டு, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைத்தனர். விசாரணையில், இருளர் சமூக மக்களுக்கு கடன் கொடுப்பது போல் கொடுத்து, வாங்கிய கடனுக்காக அவர்களை அடிமைகளாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதில், இருளர் சமூக மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி தங்க வைத்துள்ள அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக பாலு என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story