"அரசு புறம்போக்கில் உள்ள கடைகளுக்கு முறைகேடாக வரி வசூல்" - சமூக ஆர்வலர் விடுத்த கோரிக்கை

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசு புறம்போக்கில் உள்ள கடைகளுக்கு முறைகேடாக தனிநபர் வரி வசூல் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.இளையான்குடி அருகே உள்ள சாலைகிராமத்தில் பேருந்து நிலையம் அருகே 26 ஏக்கரில் நீர்நிலைப் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள் வத்துள்ளனர். அரசியல் கட்சியினரும் அலுவலகம் வைத்துள்ளனர். இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஒருசில கடைகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. அங்குள்ள அரசு கட்டிடங்கள் உட்பட 69 கட்டிடங்களையும் இடிக்க இளையான்குடி வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இதற்கிடையே, அங்கு கடைகளுக்கு ராமநாதபுரம் திவான் உரிமையாளர் எனக் கூறிக் கொண்டு 10 ஆண்டுகளாக வாடகை, வரி ஆகியவற்றை வசூலித்து வருவதாக சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். அவரிடம் இருந்து வாடகைப் பணத்தை வட்டியுடன் சேர்த்து அரசு வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்