காயமடைந்த வில்லியம்சனுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த குஜராத்

x
  • ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து வெளியேறிய கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை ஆல்ரவுண்டர் ஷனகா குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் பீல்டிங்கின்போது கால் பகுதியில் வில்லியம்சன் காயம் அடைந்தார்.
  • இதனால் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தொடரில் இருந்து அவர் விலகினார்.
  • இந்நிலையில், இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனான ஷனகாவை 50 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
  • வில்லியம்சனுக்குப் பதிலாக நடப்பு தொடரில் ஷனகா விளையாடுவார் என்றும் குஜராத் அணி தெரிவித்து உள்ளது

Next Story

மேலும் செய்திகள்