இன்ஸ்டாகிராம் மூலம் ஐபிஎல் டிக்கெட்... சென்னை Vs மும்பை ஆட்டத்தை காண ஆர்வமுடன் இருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிரிக்கெட் மீதான அதீத மோகத்தின் காரணமாக, அதிக விலை கொடுத்தும் ஐபிஎல் டிக்கெட் பெற ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் பெற, அருண் என்பவர் இன்ஸ்டாகிராமில் 'ஐபிஎல் டிக்கெட் 2023' என்ற பக்கத்தை அணுகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆன்லைன் கால் மூலமாக பேசி, வினோத் யாதவ் என்பவரிடம் 20 டிக்கெட்டுகளுக்கான தொகையாக 90 ஆயிரம் ரூபாயை தவணை முறையில் அனுப்பியுள்ளார். இதனிடையே பணத்தை செலுத்தியும் டிக்கெட் அனுப்பாததால் சந்தேகம் அடைந்த அருண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வினோத் யாதவ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story