போதையில் விபத்தை ஏற்படுத்தியவர் சரமாரியாக அடித்து உதைத்தனர் - ஓடையில் தூக்கி வீசப்பட்ட பைக்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியவர் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமந்தாபுரம் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன், குடிபோதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி வந்து சாலையோரம் நின்றிருந்த கருப்பசாமி என்பவர் மீது மோதியுள்ளார். இதில், சவுந்தரராஜனின் பைக் சேதமான நிலையில், கருப்பசாமி லேசான காயம் அடைந்தார். கருப்பசாமியுடன் நின்றிருந்தவர்களும் போதையில் இருந்த நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக சவுந்தராஜனை சரமாரியாகத் தாக்கியதோடு, அவரது இருசக்கர வாகனத்தைத் தூக்கி ஓடையில் கிடாசியுள்ளனர்... சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சவுந்தரராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story