"முன்னாள் காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை" - கொடநாடு வழக்கில் புது திருப்பம்
கொடநாடு வழக்கில் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தி 16 பக்க வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், சிபிசிஐடி போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையின் போது, கொலை, கொள்ளை தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், சம்பவத்தின் போது காவல் கண்காணிப்பாளரின் ஆய்வாளராக இருந்த ஜான் மற்றும் கூடலூர் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க இருப்பதால், சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.