நடிகர் யோகிபாபு படத்திற்கு இடைக்கால தடை

x

நடிகர் யோகி பாபு நடித்துள்ள 'தாதா' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மணி என்ற திரைப்படத்தை தயாரித்ததாகவும், அதன் ஹார்ட் டிஸ்கை திருடி, தாதா படத்தை கிஷோர் குமார் என்பவர் உருவாக்கியுள்ளதாக கூறி துரைராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தாதா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, கிஷோர் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்