இந்தியா பற்றி அறிய நினைக்கும் உலக நாடுகள் பிரதமர் சொன்ன சுவாரஷ்ய தகவல்
இந்திய கல்வி நிறுவனங்கள் உலக அளவில் முத்திரை பதித்து வருவதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய அவர், டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது இயக்கம் எனக் குறிப்பிட்டார். எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதன் கல்வி நிறுவனங்கள் தான் அதன் உண்மையான அடையாளம் எனத் தெரிவித்த பிரதமர், நாளந்தா, தக்சசீலா பல்கலைக்கழகங்கள் உலகிற்கே வழிகாட்டியாக இருந்ததாகவும் பெருமை தெரிவித்தார். கல்வியில் பாலின விகிதம் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், கல்வி நிறுவனங்களை பொறுத்து நாட்டின் வளர்ச்சி ஆகாய உச்சத்தை எட்டும் என்றார். மேலும் இந்தியாவைப் பற்றியும், அதன் கலாச்சாரம் குறித்தும் உலக நாடுகள் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியா பற்றி அறிய நினைக்கும் உலக நாடுகள் பிரதமர் சொன்ன சுவாரஷ்ய தகவல்