கறவை மாடுகளுக்கு காப்பீடு..அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்

x

ஆவினில், பால் கையாளும் திறனை நாள்தோறும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் என, அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டார்.

பால் உற்பத்தியாளர்கள் சேவையை அதிகரிப்பது, அரசின் நலத்திட்டங்களை பால் உற்பத்தியாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள காலி நிலங்கள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தினார். பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் உள்கட்டமைப்பு வசதியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, பால் கையாளும் திறனை நாள்தோறும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் என, உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்