வறுமையில் வாடிய தாய்க்கு உதவ மகள் எடுத்த முடிவு... உயிருக்கே உலையானது.... உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் Link
- கணவருடன் கருத்து வேறுபாடு, மன வளர்ச்சி குன்றிய நிலையில் இளைய மகள்... கூடவே குடும்ப வறுமை என கதி கலங்கிய தாய்க்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என மனம் துடித்திருக்கிறது கல்லூரி மாணவியான மூத்த மகளுக்கு....
- அதற்கு அந்த மாணவி தேர்ந்தெடுத்த வழி தான் ஆன்லைன் டிரேடிங்...
- பல அனுபவஸ்தர்களே இந்த டிரேடிங் தொழிலில் நொடி அசந்தால் ஏமாற்றப்படுவதும், மோசடி கும்பலிடம் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையான நிலையில், இதையறியாமல் இறங்கிய இளம் பெண்ணின் நிலைமை கடும் விபரீதத்தில் வந்து முடிந்திருக்கிறது....
- சென்னை, 7 கிணறு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், சுபாஷ் என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
- இவர் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான தனியார் நிறுவன பொருட்களை 15 வருடங்களாக விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக தெரிகிறது...
- இதுபோக, இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இளைய மகள் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது
- இந்நிலையில், சாந்தியின் இரண்டாவது மகளான மகாலட்சுமி அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில், தனது தனது தாய் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் அல்லல் படுவதை கண்டு வருத்துமடைந்துள்ளார்.
- இதனால், அவருக்கு எதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என நினைத்த மகாலட்சுமி, ஆன்லைனில் வணிகம் செய்ய விரும்பி தொடர்ந்து அது குறித்த இணையதள பக்கங்களையும், லிங்க்குகளையும் இன்ஸ்டாகிராமில் தேடி வந்துள்ளார்...
- அப்போது தான் இன்ஸ்டாவில் குடிகொண்டிருக்கும் மோசடி கும்பலின் இணையதள பக்கத்தில் மாணவி சிக்கியிருக்கிறார்...
- இன்ஸ்டாவில் மாணவியை தொடர்பு கொண்ட கும்பல் ஆன்லைன் டிரேடிங் தொழில் குறித்து தொடர்ந்து பேசி, அதற்கான சில விளம்பரங்களையும் காட்டி ஆசையை கிளப்பியுள்ளனர்...
- இதில், ஒரு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என கூறி கும்பல் ஒரு லிங்க்கை அனுப்பியுள்ளது...
- அந்த லிங்க்கின் வழியே உள்ள சென்ற மாணவி, அதில் கேட்கும் விவரங்களை, கும்பலின் வழிகாட்டுதலோடு பூர்த்தி செய்து, முதலீடாக தாயின் வங்கி கணக்கில் இருந்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பியுள்ளார்...
- இந்நிலையில், பணம் அனுப்பிய பின்பு அடுத்த கட்டம் குறித்து காத்திருந்த மாணவிக்கு முடிவுகட்டம் கட்டியிருக்கிறது கும்பல்...
- பணத்தை பெற்றுக்கொண்ட பின்பு எந்தவொரு தகவலும் வராத நிலையில், கும்பலை தொடர்பு கொண்ட மாணவி தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அதிர்ச்சியடைந்துள்ளார்...
- தொடர்ந்து கும்பலிடம் பணத்தை திரும்பி கேட்டு கண்ணீர் வடித்த மாணவி, தனது குடும்பம் இருக்கும் நிலையில், தற்போது நடந்திருப்பதை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்..
- இந்நிலையில், வீட்டின் அறையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....
- தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், மாணவியின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...
- இதில், மாணவி தற்கொலை தான் செய்து கொண்டாரா?... ஆன்லைன் வணிகம் என்ற பெயரில் மோசடி கும்பலிடம் சிக்கியது உண்மை தானா?... இல்லை இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
Next Story