இன்ஸ்பெக்டர் சுவர்ணலதாவுக்கு விபரீத ஆசை.. வழுக்கி விழுந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராகவும், போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணை தலைவராகவும் இருப்பவர் சுவர்ணலதா... சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க ஆசைப்பட்ட ஸ்வர்ணலதா, அதற்காக தான் நடித்து வரும் படத்தில் பண முதலீடு செய்வதற்காக மோசடி திட்டம் ஒன்றை அரங்கேற்றி, அதில் சக காவலர்களையும் உடன் சேர்த்திருக்கிறார்... 90 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 ரூபாய் கட்டுகளை கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தருவதாக விளம்பரம் செய்திருக்கிறார்...இதற்காக தனக்கு கீழ் பணிபுரியும் காவலர் ஹேம சுந்தர், ஊர்காவல் படையை சேர்ந்த மேகர், சீனு மற்றும் இடைத்தரகரான சூர்யா என்பவரையும் கூட்டு சேர்த்திருக்கிறார்...
இப்படி இவர்கள் விரித்த வலையில் விழுந்தவர்கள் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளான கொல்லி ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதர்... இடைத்தரகர் சூர்யா மூலம் வலையில் விழுந்த இருவரும், சூர்யா சொன்ன டீலிங்படி பணத்தை கைமாற்றுவதற்காக 90 லட்ச ரூபாய் பணத்துடன் காரில் வந்துள்ளனர்.... அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபடுவதுபோல முன்பே செட்டப் செய்து வைத்திருந்த காவலர்கள், ஹேம சுந்தர், மேகர், சீனு ஆகிய மூவரும், பணம் கொண்டு வந்த முன்னாள் கடற்படை அதிகாரியை மடக்கி சோதனை செய்துள்ளனர்...அப்போது, அவர்களிடம் இருந்து பணத்தை கைப்பற்றி விசாரணை என்கிற பெயரில் மிரட்டிய மூவரும், கருப்பு பணத்தை கடத்திய தங்கள் மீது வழக்குபதியாமல் இருக்க காவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதாவுக்கு 15 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி மிரட்டி பணம் பெற்றிருக்கின்றனர்..
பணத்தை இழந்த கடற்படை அதிகாரிகள் கொல்லி மற்றும் ஸ்ரீனு இருவரும் விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்ரம் வர்மாவிடம் புகார் அளித்த நிலையில், இது குறித்து விசாரித்த போலீசாருக்கு, காவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதா 15 லட்சம் ரூபாயை முறைகேடாக பெற்றது தெரியவந்தது... அந்தப் பணத்தை, தான் நடித்து வரும் படத்தில், முதலீடு செய்ததும் வெளிச்சத்திற்கு வர, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்வர்ணலதாவையும், காவலர்கள் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு, ஹோங்கா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.