திவாலான விமான நிறுவனம் - தீர்வு காணும் முக்கிய அதிகாரி
Go First விமான நிறுவனத்திற்கு திவால் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, தற்காலிக நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். 11 ஆயிரத்து 463 கோடி ரூபாய் கடன் சுமையினால், திவால் நிலைக்கு தள்ளப்பட்ட Go First விமான நிறுவனம், தன்னிச்சையாக திவால் செய்து கொள்ள, தேசிய கம்பேனி சட்ட தீர்பாயத்தில் விண்ணப்பம் செய்திருந்தது. இதை ஏற்ற தேசிய கம்பேனி சட்ட தீர்பாயம், அபிலாஷ் லால் என்ற திவால் சட்ட நிபுணரை Go First விமான நிறுவனத்தின் தற்காலிக பொறுப்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் Go First விமான நிறுவனத்தின் சொத்துகள், விமானங்களை, கடன் அளித்தவர்கள் கையகப்படுத்துவது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. விமானங்களை லீஸ் முறையில்வாடகைக்கு அளித்தவர்கள், அவற்றை கையகப்படுத்துவதும் தடுக்கப் பட்டுள்ளது. மே 24 முதல் குறைந்த அளவிலான விமானங்களை இயக்க Go First விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 55 விமானங்களில் 23 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.