புதுவையில் இன்ஃபுளுவென்சா காய்ச்சலா? - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்
புதுச்சேரியில் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் இல்லை என, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், முக கவசம் அணியாமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தார். புதுச்சேரியில் யாருக்கும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் ஏற்படவில்லை எனவும், அதற்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்கள் அனைவரும் காய்ச்சிய தண்ணீரை அருந்த வேண்டும் என, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு அறிவுறுத்தினார்.
Next Story