இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடுகள்...ஐ.நா வெளியிட்ட உலக முதலீடுகள் அறிக்கை ...டாப் 10 நாடுகள் எது ?
இந்தியாவில் செய்யப்படும் அன்னிய நேரடி முதலீடுகள், 2022ல் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நாவின் வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
2022ல் இந்தியாவில் செய்யப்பட்ட அன்னிய நேரடி முதலீடு கள் 4,900 கோடி டாலராக, 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐ.நாவின் உலக முதலீடுகள் அறிக்கை கூறுகிறது.
Greenfield திட்டங்கள் எனப்படும் புதிகாக கட்டமைக்கப்படும் தொழிற்சாலைகளில் செய்யப்படும் அன்னிய முதலீடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2022ல் 28,500 கோடி டாலர் அளவுக்கு அன்னிய முதலீடுகளை பெற்று, உலக அளவில் முதல் இடத்தில் அமெரிக்கா தொடர்கிறது.
இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் 2022ல், 18,900 கோடி டாலர் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.
14,100 கோடி டாலர் அன்னிய முதலீடுகளுடன் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
11,800 கோடி டாலருடன் நான்காம் இடத்தில் ஹாங்காங்கும், 8,600 கோடி டாலர் அன்னிய முதலீடுகளுடன் ஐந்தாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன.
6,200 கோடி டாலர் அன்னிய முதலீடுகளுடன் ஆஸ்திரேலியா ஆறாம் இடத்திலும், 5,300 கோடி டாலருடன் கனடா ஏழாம் இடத்திலும் உள்ளன.
2022ல் 4900 கோடி டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ள இந்தியா இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது.
4,600 கோடி டாலர் அன்னிய முதலீடுகளுடன் ஸ்வீடன் ஒன்பதாம் இடத்திலும், 3,600 கோடி டாலருடன் பிரான்ஸ் பத்தாம் இடத்திலும் உள்ளன.