இந்தியாவிலேயே முதல் 'வாட்டர் மெட்ரோ'.. ஒரே நாளில் கூடிய மக்கள் கூட்டம்

x

இந்தியாவிலேயே முதல் முறையாக 'வாட்டர் மெட்ரோ' திட்டம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று கண்டு ரசிக்கலாம். கடந்த 25 தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில், முதல் சேவையை உயர்நீதிமன்றம்-வைபின் வழித்தடத்தில் தொடங்கியது. புதன்கிழமை மட்டும், ஆறாயிரத்து 559 பயணிகள் வாட்டர் மெட்ரோவில் பயணம் செய்தனர். டிக்கெட் மூலம் அதிக வருவாய் கிடைத்தது. வாட்டர் மெட்ரோவில் பயணிப்பதற்கான ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடங்கியுள்ளது. வாட்டார் மெட்ரோவில் தினமும் 34 ஆயிரம் பயணிகள் வரை பயணிப்பார்க்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்