ஒரு காருக்காக 2 வருடம் காத்திருக்கும் இந்தியர்கள்! அப்படி என்ன கார் அது?
இந்தியாவில் ஆடம்பர கார்கள் வாங்க காத்திருப்பவர்களின்
எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
மலிவு விலை கார்களின் மிகப் பெரிய சந்தையாக கருதப்பட்ட இந்தியாவில், தற்போது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர கார்களுக்களை வாங்க 2 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஆடம்பர கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டும், அவற்றை வாங்க கடும் போட்டி நிலவுகிறது
ஆடி கார்கள் ஏ6, கியு3 போன்ற ரகங்களை வாங்க ஒன்று முதல் மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆர்.எஸ் ஈ - டிரான் ஜி.டி ரக ஆடி காரை வாங்க 3 முதல் 5
மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதன் விலை ஒரு
கோடியே 94 லட்சம் ரூபாய்.
மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள் விற்பனை கடந்த ஆறு மாதங்களில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு சில ரகங்களை வாங்க இரண்டு ஆண்டுகள் வரை வாடிக்கை யாளர்கள் காத்திருக்கின்றனர்.
பி.எம்.டபள்யூ கார்கள் விற்பனை கடந்த ஆறு மாதங்களில் 128 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் விக்ரம் பவ கூறியுள்ளார்.
பி.எம்.டபள்யூ 7 சீரீஸ் ரக கார்களை வாங்க 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் விலை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 2022 ஜூனில் 180 ஆக இருந்து 2023 ஜூனில் 267ஆக 48.33 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவற்றின் அதிகபட்ச விலை 2 கோடியே 30 லட்சம் ரூபாயாக உள்ளது.
ஆடம்பர கார்கள் வாங்க காத்திருக்கும் இந்தியர்
ஆடி ஏ6, கியு3
ரகங்களை வாங்க
1 - 3 மாதம் வரை
காத்திருப்பு வரிசை
RS e-tron GT ஆடி கார்
3 - 5 மாதங்கள் வரை
காத்திருக்க வேண்டும்,
விலை - ரூ.1.94 கோடி
மெர்சிடீஸ் பென்ஸ் கார்
விற்பனை 54% உயர்வு
சில ரகங்களை வாங்க
2 ஆண்டுகள் காத்திருப்பு
BMW கார்கள் விற்பனை
கடந்த ஆறு மாதங்களில்
128 % அதிகரித்துள்ளது
- CEO விக்ரம் பவ
BMW 7 சீரீஸ் ரக
கார்களை வாங்க
4 மாதங்கள் காத்திருப்பு
விலை - ரூ.1.7 கோடி
ஜாகுவார் லேண்ட் ரோவர்
கார்கள் விற்பனை
2022 ஜூன் - 180
2023 ஜூன் - 267
ஜாகுவார் லேண்ட் ரோவர்
கார்கள் விற்பனை
48.33% அதிகரிப்பு
விலை - ரூ.2.3 கோடி