சீனர்கள் உத்தரவில் இயங்கிய இந்தியர்கள்... இந்தியாவில் அரங்கேற்றிய பிரமாண்ட மோசடி
இந்தியாவில் சீனர்கள் 903 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்...
உடனடியாக கடன்.... முதலீட்டு தொகைக்கு பல மடங்கு பணம் என்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி ஆன்-லைன் செயலியில் பணத்தை கைவிட்டவர்கள் ஏராளம்...
எத்தனை முறை எச்சரித்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்... பண ஆசை பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதையும் மறக்கிறார்கள்.
பிரீத் (காசு பணம் துட்டு மணி, மணி, நல்ல வாயன் சம்பாரிச்சு)
கடைசியில் இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப உழைத்த காசுகளை எல்லாம் செயலியில் விட்டுவிட்டு, காவல் நிலையத்தில் காத்துக்கிட தொடங்கி விடுகிறார்கள்.
இப்படி சின்ன முதலீடு... பெத்த லாபம் என ஆந்திராவில் வேலையை காட்டியிருக்கிறது சீனர்கள் தலைமையில் செயல்பட்ட மோசடி கும்பல்...
கிணற்றை காணோம் என்பதுபோல ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்த LOXAM செயலியை காணவில்லை என ஐதராபாத்தை சேர்ந்தவர் சைபர் கிரைம் போலீசுக்கு சென்றிருக்கிறார். அவர் அதிக பணத்தை முதலீடு செய்ததும், செயலியை அணுக முடியாது ஆப் செய்து கம்பியை நீட்டிவிட்டது மோசடி கும்பல்...
இது குறித்து புலனாய்வு செய்த போலீசாருக்கு மோசடி செயலியில் பயன்படுத்தப்பட்ட 2 வங்கி கணக்குகள் குழுவாக கிடைத்தது. வங்கி கணக்கை தொடங்கிய புனேவை சேர்ந்த வீரேந்திர சிங், டெல்லியை சேர்ந்த சஞ்சய் குமார் சிக்கினர்.
அவர்கள் சீனாவிலிருந்து சீனர்கள் உத்தரவில் இயங்கியதும், இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளின் ஆன்-லைன் பேங்கிங் வசதியை சீனர்களிடம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
அதில் ஒரு வங்கி கணக்கிலிருந்து 441 கோடி ரூபாயும், மற்றொரு வங்கி கணக்கிலிருந்து 462 கோடி ரூபாயும் கடந்த 7 மாதங்களில் 38 கணக்குகளுக்கு மாறியதும் தெரியவந்ததுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சுல்தான், மிர்சா நாதீம், சாகில், சன்னி மற்றும் துபாயில் உள்ள இமாம் வாயிலாக இந்திய பணம், டாலராக ஹவாலா மாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் இந்தியாவில் இருந்த சீன மற்றும் தைவான் நாட்டவர்கள், ஹவாலா பணம் மாற்றம் செய்ய உதவியவர்கள் என 10 பேரை கைது செய்திருப்பதாக ஐதராபாத் போலீஸ் கமிஷ்னர் சி.வி. ஆனந்த் கூறியிருக்கிறார். மீண்டும் இதுபோன்ற செயலிகளை நம்பி வாழ்க்கையையும், பணத்தையும் தொலைத்து விட வேண்டாம் என்பதே காவல்துறையின் எச்சரிக்கையாக இருக்கிறது.