கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய இளம் வீரர் லக்ஷ்யா சென் தகுதி...
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய இளம் வீரர் லக்ஷ்யா சென் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரர் ஜூலியன் கராஹி உடன் லக்ஷ்யா சென் மோதினார். இதில், 21க்கு 8, 17க்கு 21, 21க்கு 10 என்ற செட் கணக்கில் சென் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஷிமோட்டா உடன் லக்ஷ்யா சென் மோதவுள்ளார்.
Next Story