உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி அபாரம்...வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

x

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில் குரூப்-டி பிரிவில் இடம் பெற்ற இந்தியா மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இறுதியாக 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, குரூப்-டி பிரிவில் 2-வது இடம் பிடித்தது. முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய கிராஸ் ஓவர் சுற்றுக்கு தகுதிபெற்றது. கிராஸ் ஓவர் சுற்றில் வரும் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்