சொந்த மண்ணில் களமிறங்க தயாராகும் இந்திய அணி
அக்டோபர் 5ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில், அதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தொடர்ந்து, பின்னர் 2024ஆம் ஆண்டு ஜனவரியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரையும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story