டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி..முக்கிய வீரர்களுக்கு பதில் 4 புதிய வீரர்கள்

x

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல், நவம்பர் 13 ஆம் தேதி வரை டி-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யுவேந்திர சாஹல், அக்சார் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

காயத்தில் இருந்து குணமடையாததால் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை

முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகிய 4 வீரர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

வீரர்கள் யாராவது தொடரில் இருந்து விலக நேரிட்டால், இந்த 4 வீரர்களுக்கு அணியில் இணைய வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்