ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு..பாக். அமைச்சர் பங்கேற்பதால் விமானம் வான்வெளியில் பறக்க இந்திய அனுமதி
கோவாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கோவா வந்துள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு அமைச்சர் பிலாவல் பூட்டோ பங்கேற்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆவலாக உள்ளதாகவும் நட்பு நாடுகளுடன் கலந்து பேசிய நாட்டிற்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியா வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி கோரிய நிலையில் இந்திய விமான போக்குவரத்துதுறை அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.