இந்திய கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவரை தேடுதல், மீட்பது போல் ஒத்திகை
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கடலில் மூழ்கியவரை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலின் மேற்பரப்பிலிருந்து குறைந்தபட்சமாக 15 மீட்டர் உயரம் அளவிற்கு கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர்கள் பறந்து தேடுதல் ஒத்திகையில் ஈடுபட்டன.
இதனை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அதேபோல், இந்திய கடலோர காவல் படையின் 47 வது எழுச்சி நாளை ஒட்டி கடலில் கப்பல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நின்றன.
Next Story