"போடா பொடியா"..விரட்டிய நிறுவனங்கள்...உலகை அசர வைத்த இந்திய சிறுவன் - 9 வயதில் 141+

x

வெறும் 14 வயது தான்... இந்த வயதில் ஓட்டுனர் உரிமம் கூட பெற முடியாது... ஆனால் பூமிக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தில் அடுத்த மாதம் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியில் சேர இருக்கிறார், இந்த 14 வயது பாலகன் என்பதுதான் ஆச்சரியம். படித்து முடித்து பல வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்க வில்லை என விரக்தியில் சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் 14 வயதில் பட்டப்படிப்பை படித்து முடித்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உள்பட 3 மிகப்பெரிய கம்பெணி களின் ஜாப் ஆஃபர் லெட்டருடன் கெத்தாக வலம் வருகிறார் இந்த சிறுவன். 11 வயதில் கல்லூரியில் சேர்ந்து இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியராக பட்டப்படிப்பை முடித்தது மட்டுமின்றி தனது சீனியர்களுக்கே கிளாஸ் எடுக்கும் அளவிற்கு அதி புத்திசாலியாக வளம் வந்த இந்த சிறுவனின் பெயர் 'கைரன் குவாசி'.

மற்ற குழந்தைகள் எல்லாம் திக்கித் திணறி மழலை மொழி பேசி பழகும் 2 வயதில், சரளமாக முழு வாக்கியங்களை பேசி பிரமிக்க வைத்துள்ளார், கைரன். எல்கேஜி... யுகேஜி படிக்கும் பொழுது மற்ற குழந்தைகள் எல்லாம்... 'காட்டின் ராஜா சிங்கம்' 'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்' என கதை கேட்டு வர... சிரியா நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சக குழந்தைகளிடம் கூறி அவர்களை பயமுறுத்தி அழ வைத்து இருக்கிறார், கைரன். ரேடியோ... டிவி... என தனது காதுகளில் விழும் தகவல்களை கூர்ந்து கவனித்தது மட்டுமின்றி அவற்றை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலை ஐந்து வயதிலேயே தனது மகன் பெற்றதாக பூரிக்கிறார், இவரது தாய் IQ எனப்படும் நுண்ணறிவு அளவு சராசரி மனிதனுக்கும் 100 ஆக இருக்க வேண்டுமென்றால் மிகவும் திறமையான மேம்பட்ட நுண்ணறிவு கொண்ட இந்த சிறுவனின் IQ 141+... இப்படி சிறுவயதிலேயே தனது புத்தி கூர்மையால் பலரையும் அதிர வைத்த இந்த சிறுவன்... தனது ஒன்பது வயதிலேயே பள்ளி படிப்பிற்கு என்ட் கார்டு போட்டு விட்டார்.

9 வயதிலேயே அமெரிக்காவில் உள்ள community காலேஜில் இரண்டு ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்ந்த இவர்... அதன் பிறகு santa Clara பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் கைரன் குவாசிக்கு வேலை அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை... அசாத்திய அறிவாற்றல் கொண்டவராக இருந்தாலும், வேலைவாய்ப்பில் அவரது வயது ஒரு தடையாக இருந்து வந்தது.இதுவரை 95 முறை வேலை தேடிச் சென்ற இடத்தில் நிராகரிப்பை சந்தித்துள்ள கைரன்... தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் மிக இளம் வயது இன்ஜினியராக பணியாற்ற உள்ளார். மிக குறைந்த வயதில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப் பிடித்துள்ள கைரனை... பலரும் வியப்புடன் பார்ப்பது மட்டுமின்றி.. இன்னும் மென்மேலும் உயரங்களை அவர் தொட பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்