ராணுவ செலவு - சீனாவை முந்திய இந்தியா!
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், மிக அதிக அளவில் ராணுவத்துக்கு செலவு செய்யும் நாடுகள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
2021ல், ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3 சதவீதத்தை ராணுவ செலவுகளுக்கு ஒதுக்கியுள்ள ஓமன், முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள குவைத், 6.7 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.
6.6 சதவீதத்தை ஒதுக்கிய சவதி அரேபியா மூன்றாம் இடத்திலும், 5.61 சதவீதத்தை ஒதுக்கிய அல்ஜீரியா நான்காம் இடத்திலும், 5.2 சதவீதத்தை ஒதுக்கிய இஸ்ரேல் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
4.8 சதவீத்தை ஒதுக்கிய கத்தார் ஆறாம் இடத்திலும், 4.1 சதவீதத்தை ஒதுக்கிய ரஷ்யா ஏழாம் இடத்திலும், 3.9 சதவீதத்தை ஒதுக்கிய கிரீஸ் எட்டாம் இடத்திலும் உள்ளன.
3.8 சதவீதத்தை ஒதுக்கிய பாகிஸ்தான் ஒன்பதாம் இடத்திலும், 3.5 சதவீதத்தை ஒதுக்கிய அமெரிக்கா பத்தாம் இடத்திலும் உள்ளன.
2021ல், ஜி.டி.பியில் 2.7 சதவீதத்தை ராணுவ செலவுகளுக்கு ஒதுக்கிய இந்தியா இந்தப் பட்டியலில் 15வது இடத்திலும், 1.7 சதவீதத்தை ஒதுக்கிய சீனா 19வது இடத்திலும் உள்ளன
நிகர தொகைகளின் அடிப்படையில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், ராணுவ செலவுகளுக்கு ஒதுக்கப்படும் சதவீதம் அதிகமாக இருந்தால், அந்நாட்டிற்கு அது பெரும் சுமையாக இருக்கும்.
இந்த அடிப்படையில், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், மிகக் குறைந்த விகிதத்தை ராணுவ செலவுகளுக்கு ஒதுக்குவதால், அங்கு
மக்கள் நலத்திட்டங்களுக்கு மிக அதிக சதவீத்தை ஒதுக்க முடிகிறது.
சுவிட்சர்லாந்தில் 0.7 சதவீதம் மட்டுமே ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அங்கு வறுமை மிக மிகக் குறைவாகவும், வாழ்க்கை தரம் மிக உயர்ந்த நிலையிலும் உள்ளது.