"போர் திணிக்கப்பட்டால் இந்தியா எதிர்கொள்ளும்" - ராஜ்நாத் சிங் அதிரடி
எல்லையில் ஏற்படும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அருணாசலப்பிரதேசம் சியாங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்கு 724 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டிருந்த 27 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போரை ஆதரிக்கும் நாடு அல்ல இந்தியா, ஒரு வேளை போர் திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வோம் என்று பேசினார். நாட்டில் குறிப்பாக, வடக்கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பா.ஜ., சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த அவர், எல்லையில் ஏற்படும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.
Next Story