இந்தியா - ஆஸி. 3வது டெஸ்ட் போட்டி... லயனின் சுழலில் சுருண்டது இந்தியா...
- இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா 76 ரன்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இந்தூரில் நடைபெற்று வருகிறது.
- 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தங்கள் முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- இதனையடுத்து, 2வது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனின் சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
- லயனின் அபார பந்துவீச்சால் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல சரிந்தன. புஜாரா மட்டும் சற்று தாக்குப்பிடித்து 59 ரன்கள் எடுத்தார்.
- 2வது இன்னிங்சில் 163 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது. நாதன் லயன் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- ஆஸ்திரேலியாவிற்கு 76 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ள நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
Next Story