"இந்தியாவுக்கு பேராபத்து வந்திருக்கிறது..ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலையில்லை" - முதல்வர் ஸ்டாலின்

x

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவிற்கு பாஜகவால் பேராபத்து வந்து கொண்டிருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.


திருமண விழாவில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கு பேராபத்து வந்திருப்பதாக பாஜக அரசை பகீரங்கமாக விமர்சித்தார்.

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரே கொள்கையோடு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில் களத்தில் இறங்கி இருப்பதாக கூறிய முதலமைச்சர், மணமக்களை வாழ்த்தி விட்டு உரையை முடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்