"இந்த அவமானம் தேவையா..?" - "பதிலளிக்கக் கூட தகுதியில்லை... " - ஐ.நா.வில் பாக்.-ஐ பங்கம் செய்த இந்தியா
- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள், அமைதி, பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
- இதில் கலந்துக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜம்மு காஷ்மீர் விஷயத்தை எழுப்பினார்.
- இதற்கு பதிலடி கொடுத்த ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ், காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் பிரதிநிதியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது, அரசியல் நோக்கம் கொண்டது என்றார்.
- பொய்யான, தவறான பிரசாசரங்கள் பதிலளிக்கக் கூட தகுதியற்றது எனக் குறிப்பிட்ட ருசிரா, இந்தியாவின் கவனம் நேர்மறையான எண்ணங்கள்,வளர்ச்சியில் இருக்கும் என்றார்.
- பல்வேறு தளங்களில் ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியெனவும், இது தொடரும் எனவும் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story