டெல்லியில் இந்தியா-ஆஸி. மோதும் 2வது டெஸ்ட் - படுதோல்விக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி.?
- இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
- நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
- இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
- முதல் போட்டியில் வென்ற உற்சாகத்துடன், இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளது.
- காயத்தில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ள சூழலில், சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக அவர் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தடுமாறிவரும் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
- முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா, இந்தப் போட்டியில் மீண்டு வர முயற்சிக்கக்கூடும்.
- இதனால், டெல்லி டெஸ்ட் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story