IND VS SA OneDay - முக்கிய இந்திய வீரர் விலகல்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளிலும் தீபக் சஹார் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளதால் ஒருநாள் தொடர் இருந்து அவர் விலகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தீபக் சஹார் பங்கேற்கவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், மாற்று வீரர்களுக்கான பட்டியலில் தீபக் சஹார் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story