"காதலின் பெயரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை" - கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

x

"காதலின் பெயரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை" - கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஒன்பதாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கற்பிக்க வேண்டும் என, கர்நாடக மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிறுமியை சிறுவன் காதலித்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜு மற்றும் நீதிபதி பசவராஜ் அமர்வு, காதல் என்ற பெயரில் தொடங்கி பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக கூறியது. எனவே இது தொடர்பாக இளம் பருவ மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அமர்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் கற்பிக்க வேண்டும் என,கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. மேலும் ஒரு குழு அமைத்து என்ன மாதிரியான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள போகிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்