அதிகரித்து வரும் தெருநாய்கள்..மக்களை கடிப்பதால் அச்சம்..கருணைக் கொலை செய்யக்கோரி மனு
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் தெருநாய் பிரச்சனையில் உடனடியாக தலையிடக் கோரி, பிரதமர் மோடிக்கு பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் சமீபகாலமாக தெருநாய்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் கண்ணூரில் மட்டும் தெருநாய்கள் 6 ஆயிரத்து 237 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், ரேபிஸ் பாதித்த, மனிதர்களை தாக்கும் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.பி.திவ்யா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நாய்கள் கடித்ததால் குழந்தை இறந்தது துரதிர்ஷ்டவசமானது எனக்கூறியது. மனு தொடர்பாக ஜூலை 7ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனிடையே, ரேபிஸ் பாதித்த தெருநாய்கள் மற்றும் ஆபத்தான தெருநாய்களை கருணைக்கொலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கண்ணூர் பஞ்சாயத்து தலைவர் பிபி திவ்யா கடிதம் எழுதியுள்ளார்.