சாலை ஓரத்தில் பைக் நிறுத்துபவர்களே உஷார்... களவு போகும் முக்கிய பொருள்

x

சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் இருந்து பேட்டரிகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவொற்றியூரில் கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி லட்சுமி என்ற பெண்ணின் இருசக்கர வாகனம் திருடு போனது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஜயன் என்பவர் திருட்டில் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து போலீசார், 10 பேட்டரி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்