வருமான வரி.. நிதியமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

x

வரி செலுத்துவோரின் விண்ணப்பங்களை பரிசீலித்து, குறித்த காலத்தில் அவற்றின் மீது தீர்வு காண வேண்டும் என, அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய வருவாய்த்துறை செயலாளர், நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள், நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை நடவடிக்கை வழக்குகள் உள்ளிட்டவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்