புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா.. யாரெல்லாம் பங்கேற்பு? - புறக்கணிப்பு? - வெளியானது முழு லிஸ்ட்!

x

புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா.. யாரெல்லாம் பங்கேற்பு? - புறக்கணிப்பு? - வெளியானது முழு லிஸ்ட்!

டெல்லியில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் பங்கேற்கின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்கிறார்.

இவ்விழாவை காங்கிரஸ் உட்பட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்நிலையில், இவ்விழாவில், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் உட்பட மொத்தம் 15 கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி,

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா , ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி, அப்னா தளம், இந்திய குடியரசுக் கட்சி,

தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்,

மிசோ நேஷனல் ஃப்ரண்ட் , யுவஜனா ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி

தெலுங்கு தேசம் கட்சி, ஷிரோமணி அகாலி தளம், பிஜு ஜனதா தளம் ஆகியவை பங்கேற்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்