குப்பை வண்டியோடு தன்னையும் கொளுத்தி கொள்ள முயன்ற துப்புரவு பணியாளரால் வேலூரில் பரபரப்பு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணாம்பட்டு நகராட்சியில், 20 ஆண்டுகளாக ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணியாற்றி வரும் பயாஸ் அஹம்மத் என்பவர், பணி நிரந்தரம் செய்ய கோரி, குப்பை வண்டியுடன் நகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, தன்னை வேறு வார்டுக்கு மாற்றக்கூடாது என கோரி, உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய போலீசார், எச்சரித்து அனுப்பினர்.
Next Story