கணவன், மனைவி சண்டை.. நடுவே சிக்கிய பெண் போலீஸ் SSI கைது
திருவண்ணாமலை அருகே குடும்பப் பிரச்சினை தொடர்பாக புகார் கொடுத்த மனைவியின் கணவரிடம், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ் பாலானந்தல் பகுதியை சேர்ந்த வெற்றிவேல், பரிமளா தம்பதியினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இது குறித்து பரிமளா, கணவர் வெற்றிவேல் மீது, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வெற்றிவேலை அழைத்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி, அவரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்தனர்
Next Story