அக்னிபாத் திட்டத்தில்... வெளியானது அசத்தல் அறிவிப்பு

x

அக்னிபாத் திட்டத்தில் நிரந்தர பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெலியாகி உள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும், 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களில், 25 சதவீதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளபடுவார்கள். இந்நிலையில், நிரந்தரப் பணியாளர்களாக சேர்ப்பதை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது உச்ச வரம்பையும் 21-இல் இருந்து 23-ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றங்கள் குறித்து இந்திய ராணுவம் விரைவில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் முன்மொழிவை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்