தமிழகத்தில் ஸ்மார்ட்டாக கைவரிசை... குஜராத் சென்று தட்டிதூக்கிய TN போலீஸ் - பரபரப்பு பின்னணி...
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னிடம் தொடர்பு கொண்ட ஒருவர் மூலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தற்காக 11 லட்ச ரூபாயை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ததாக இணைய வழியில் செலுத்தியதாக கூறியுள்ளார். அந்த தொகை தனக்கு திரும்பி வரவில்லை என்றும் அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பணம் பெற்றவரின் வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை ஆராய்ந்ததில், குற்றவளிகள் குஜராத் மாநிலம், சூரத் நகரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சூரத் சென்று, தனிவாலா மஹபூப் இப்ராஹிம் என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
Next Story