முதியவர்களை தாக்கியதன் எதிரொலியாக..காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
முதியவர்களை தாக்கியதன் எதிரொலியாக, சென்னை கொத்தவால்சாவடி காவல்நிலைய உதவி ஆய்வாளர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை துறைமுகம் தொகுதி கொத்தவால்சாவடியில், அதிமுக சார்பில் ஆயிரம் ஏழை எளிய பெண்களுக்கு சேலைகளும்,
5 ஆயிரம் பேருக்கு மதிய உணவும் வழங்கும் நிகழ்ச்சியும், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அந்தப் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால், பாதுகாப்புப் பணியில் போதுமான அளவிற்கு போலீசார் அமர்த்தப்படவில்லை என கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொத்தவால்சாவடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பவர், முதியவர்கள் என்று கூட பார்க்காமல் தரதரவென இழுத்து கீழே தள்ளிவிடுவதும், சட்டையை பிடித்து ஒருவரை எட்டி உதைப்பதும் போன்ற காட்சி, சமூ வலைதளங்களில் வைரலாகியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.