ஓடும் பேருந்தில் இருந்து குதித்த தாய்.. 5 பெண் குழந்தைகளின் நிலைமை!.. சிக்கிய கடிதம் - தெரிந்த பகீர் தகவல்
- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, வார்டு உறுப்பினர்கள் பணி செய்யவிடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதால், மனமுடைந்த பெண் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருமங்கலத்தை அடுத்த மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமிக்கு, 5 பெண் குழந்தைகள் உள்ளன.
- 100 நாள் வேலை திட்டத்தில், பணித்தள பொறுப்பாளராக நாகலட்சுமி பணிபுரிந்து வந்துள்ளார்.
- கடந்த சில நாட்களாக, பணிக்கு சென்ற நாகலட்சுமியை, மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர் தரக்குறைவாக பேசி, பணியினை வழங்க முடியாது என மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
- இதில், மனமுடைந்த நாகலட்சுமி, திருமங்கலம் நோக்கி சென்ற, ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்ததில் உயிரிழந்தார்.
- தற்கொலைக்கு வார்டு உறுப்பினர்களான வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோரே காரணம் என, நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் மீட்டனர்.
- இதனிடையே, தாயை பறிகொடுத்த குழந்தைகள், கதறி அழுதது காண்போரை வேதனை அடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story