கேரளாவில் ராகுல் காந்தி-வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

x

கேரளாவில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும், அம்மாநில மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 3 ஆயிரத்து 570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது நடைபயணத்தை நேற்று நிறைவு செய்தார்.

தொடர்ந்து கேரளாவில் இன்று நடைபயணத்தை தொடங்கிய அவருக்கு வழிநெடுகிலும் அம்மாநில மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நடைபயணத்தில், திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனிடையே, 19 நாட்கள் கேரளாவில் நடை பயணம் மேற்கொள்ளும் அவர், பின்னர் கூடலூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூர் செல்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்