பட்டப்பகலில்.. நடுரோட்டில்.. ஹைடெக் லஞ்சம்.. பரபரப்பு வீடியோ.. அதுக்கு அதிகாரி தந்த விளக்கம் தான் ஹைலைட்
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு துணை வட்டாட்சியராக பணி புரிந்து வந்தவர் பட்டா வழங்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது...
பொன்னேரி துணை வட்டாட்சியராக பணிபுரிந்த கந்தசாமி, தற்போது ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியபோது, பயனாளி ஒருவரிடம் பட்டா வழங்க கையூட்டாக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் பட்டா வழங்காமலேயே கடந்த மார்ச் மாதல் கந்தசாமி பணி மாறுதலில் ஊத்தூக்கோட்டை சென்று விட்ட நிலையில், அவர் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் அந்தப் பணம் வேறு செலவிற்காக வாங்கியது என்றும் அந்த வீடியோவைப் பொய்யாகத் திரித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளதாகவும் கந்தசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.