இன்னும் 12 மணி நேரத்தில்.. சூறாவளி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

x

இன்னும் 12 மணி நேரத்தில்.. சூறாவளி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மத்திய வங்காள விரிகுடாவில் அது மீண்டும் வளைந்து அக்டோபர் 25 அதிகாலையில் வங்கதேச கடற்கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்