10th ரிசல்ட்டில் இந்த மாவட்டம் மாஸ்..!
- 10ம் வகுப்பு தேர்வில் 83 விழுக்காட்டிற்கு குறைவாக எந்த மாவட்டங்களும் பெறவில்லை. பல்வேறு மாவட்டங்கள் அபாரமான தேர்ச்சியை பெற்றுள்ளன.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்கள் கடைசி இடங்களில் இருந்த நிலையில் தற்போது ஒரு சில இடங்கள் முன்னேறி இருக்கின்றன
- பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீதத்துடன் முதலிடத்தையும், சிவகங்கை 97.53 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் 96.22 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
- விருதுநகரை தொடர்ந்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி அரியலூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் அடுத்தடுத்த இடத்தை பெற்று இருக்கின்றன
- கடந்த காலங்களில் கடைசி இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம், இம்முறை 21வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த மாவட்டத்தில் 91.34 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்
- அதே போன்று விழுப்புரம் மாவட்டம் 25-ஆவது இடம் பிடித்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 90.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
- தலைநகர் சென்னைக்கு 30-வது இடம் கிடைத்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 89.14 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
- கடைசி மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறது.
Next Story