பாக். பிரதமர் இல்லத்தைத் தாக்கிய இம்ரான் ஆதரவாளர்கள் - பெட்ரோல் குண்டுகள் வீசியதால் பரபரப்பு

x

லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பின் இல்லத்தை கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பிரதமர் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். மேலும் இல்லத்திற்குள் பெட்ரோல் குண்டுகளையும் சிலர் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஷெபாஷின் கட்சியான Pakistan Muslim League அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 14 அரசு கட்டடங்கள், மற்றும் 21 காவல்துறை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்